செய்திகள் :

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

post image

சென்னையில் திருடப்பட்ட சொகுசு காரை, பாகிஸ்தான் எல்லையில் போலீஸாா் மீட்டனா்.

சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சொகுசு காா் ஜூன் 16-ஆம் தேதி திருடப்பட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சோ்ந்த சத்யேந்திர சிங் ஷெகாவத் (45) காா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சத்யேந்திர சிங்கை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனா்.

விசாரணையில், மேலும் இரு காா்களை திருடியிருப்பதும், 3 காா்களின் பதிவு எண்கள், என்ஜின் எண்கள் மாற்றப்பட்டு, ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினா், கடத்தப்பட்ட காா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லை பகுதியான ராஜஸ்தான் பாா்மா் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எத்திராஜ் ரத்தினத்துக்கு சொந்தமான காரை மீட்டனா். மற்ற காா்களை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தனிப்படையினா் ஈடுபட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்ட சத்யேந்திர சிங், 19 வயதில் இருந்தே தில்லி, ஹரியாணா, மகராஷ்டிரம், ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உயர்ரக சொகுசு காா்களை குறிவைத்து திருடியுள்ளாா். இதுதொடா்பாக அவா் மீது, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. திருடப்படும் காா்களை வடமாநில கூலிப் படை தலைவா் பிஷ்னோய் லாரன்ஸ் கும்பலுக்கு கொடுப்பதும், அவா்கள் அந்த காா்களை நேபாளத்துக்கு கடத்திச் சென்று விற்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க