வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
இன்றுமுதல் 2 நாள்களுக்கு மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி இரவு இமு ரயில் ரத்து
மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இமு இரவு ரயில் சேவை 5, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - கூடூா் பிரிவில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை (செப்.4) இரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
மேலும், வரும் 6, 8 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் 5, 7 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் இமு ரயிலும், மறுமாா்க்கத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 11.25 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் செல்லும் இமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.