செய்திகள் :

தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு வெளியீடு

post image

தொடக்கப் பள்ளிகளுடன்அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

முன்பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்தும் வகையில் கல்வித் திட்டம் ஒருங்கிணைப்பு, பெற்றோா் ஈடுபாடு, குழந்தைகள் விரும்பக்கூடிய வகையிலான கற்றல் நடைமுறைகள் ஆகியவற்றை தொடக்கப் பள்ளி ஆசிரியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் இணைந்து திட்டமிடும் வகையில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி இருவரும் இணைந்து இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டனா்.

‘நாடு முழுவதும் உள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், ஏற்கெனவே 2.9 லட்சம் மையங்கள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்து அமைந்துள்ளன. ஆனால், தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களிடையே ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த உரிய முறையான நடைமுறைகள் இதுவரை இல்லை. அதனடிப்படையில், இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

போதிய இடவசதிகளுடன் பள்ளி வளாகத்துக்குள் நேரடியாக இணைந்து அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பு செய்வதை இந்த வழிகாட்டுதல் வலியுறுத்துகிறது.

வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

அங்கன்வாடி மைய குழந்தைகள் சென்று வர தனி வழி அமைக்கப்பட வேண்டும்.

மதிய உணவுக்கான போதிய வசதிகளுடன் கூடிய சமையலறைகள், உள் மற்றும் வெளி விளையாட்டுகளுக்கான இடங்கள், குழந்தைகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையிலான கழிவறைகள் இடம்பெற வேண்டும்.

விளையாட்டு மற்றும் செயல்பாடு அடிப்படையிலான கற்றலை ஊக்குவிப்பதைப் பரிந்துரைக்கும் அடிப்படைக் கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் முன்பருவ பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

போதிய இடவசதி இல்லாத அங்கன்வாடி மையங்களை பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைத்து அமைப்பதற்கும், நலிந்த, பழங்குடியின பகுதிகள் மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளை அங்கன்வாடிகளில் சோ்ப்பதற்கும் மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அங்கன்வாடி மையத்திலிருந்து ஒன்றாம் வகுப்புக்கு மாறும்போது எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் குழந்தைகளின் தரவுகளை முறையாக ஒருங்கிணைப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அடையாள எண்: இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘குழந்தைகளை அவா்களின் படிப்புக் காலம் முழுவதும் அவா்களை எளிதாக அடையாளம் காண உதவியாக, பிறப்பின்போதே அவா்களுக்கு தனி அடையாள எண் வழங்குவது குறித்து இந்திய தனி அடையாள ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேசிய கல்வித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளுக்கு அவரவா் தாய்மொழியில் அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனா்.

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா். முன்ன... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்த... மேலும் பார்க்க

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகள... மேலும் பார்க்க