2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
பெரும் தனிமையை தந்த நாயின் இறப்பு! - சிறுவயது அனுபவம் பகிரும் இளைஞர் #Straydogissue
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எழுத்தாளர்கள் ‘டொமினிக் லேப்பியர் – லேரி காலின்ஸ்’ எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ இந்தியாவின் அரசியல், வரலாறு பற்றிய மிக முக்கியமான புத்தகம். அதில் எவ்வாறு கல்வியறிவு இல்லாத இந்திய மக்கள் ஆரம்பகாலத்தில் ஜமீந்தாரி முறை இருக்கும் போது எவ்வாறு பொருளாதார தெளிவின்றி இருந்தனர் மேலும் இந்தியாவை பற்றிய முக்கிய நிகழ்வுகள் சாட்ச்சிகளோடு இருக்கும்.
‘நள்ளிரவில் சுதந்திரம்’ புத்தகத்தில் ‘ஜமீந்தார்’ ஒருவர் பெரும் பொருட்செலவு செய்து ஒரு ஆண் நாய்க்கும் – பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைப்பார். பல வகை உணவு , ஆட்டம் பாட்டம் என்று இருக்கும் அந்த நாய்களின் திருமணம்.
மராத்திய எழுத்தாளரான ‘மிருனாள் பாண்டே’ , ‘பெட்டை நாய்’ என்ற சிறுகதை ஒன்று எழுதி உள்ளார், ஒரு அடுக்குமாடி குடி இருப்பில் ஒரு தாத்தா-பாட்டி மட்டும் இருப்பர் அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்வர்.
ஒரு நாள் தாத்தா செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருப்பார் அதில் ஒரு செய்தி வரும் ‘ஆண் நாயை 12வயது பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடுவர்’ என்று அந்த செய்தியை வாசித்த தாத்தா அந்த குடும்பத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக கூறுவார் , அப்போது அங்கே வேலை பார்க்கும் ‘பெண்’, ‘தாத்தாவிடம்’., “ஆணும் – பெண்ணும்தான் சின்ன வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றுதான் சட்டம் இருக்கிறது , ஆணை திருமணம் செய்தாள் அவன் குடித்து விட்டு வருவான் , நாய் குடிக்காது , திருமணம் ஆன புதிதில் கொஞ்சி பின் சில நாட்கள் கழித்து வரதட்ச்சனை கேட்காது விடுங்கள் நாயை விட நல்ல மாப்பிளை அந்த பெண்ணுக்கு கிடைக்காது என்று அந்த கதை முடியும்..

நாயுக்கும் – மனிதனுக்குமான தொடர்பு இயற்கையோடு இயற்கையாகவே ஆதி காலம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பதற்கு மேல் கூறிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ , பெட்டை நாய்’ கதை சாட்சியே. திரு.பாலுமகேந்திரா அவர்களின் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் சேட்டை செய்யும் சிறுவர்கூட்டத்தில் ஒரு பையன் இறந்து விடுவான் அதன் பின்னர் மற்ற பசங்கள் அனைவரும் சேட்டைகளை நிறுத்தி விடுவர் அவர்களின் குழந்தை பருவம் அதோடு இறந்து விடும் . என் வாழ்விலும் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் சிறுவர்கள் குழந்தை பருவத்தை ஒரு நண்பனின் இறப்பால் தொலைத்தது போல் நான் என் வாழ்விலும் என் குழந்தை பருவத்தை தொலைத்தது நான் வசித்த என் பழைய தெருவில் இருந்த ‘டாமி’ என்ற நாயின் இறப்பு.
எனக்கு 3வயதிருக்கும் போது ‘டாமி’ நாய் நான் பள்ளியிலிருந்து வந்த உடன் வாலாட்டிய படியே என் வீட்டிற்க்கு வரும் நான் அதற்க்கு பிஸ்கட்டுகளில் இருக்கும் கிரீம்களை நக்கி வெறும் பிஸ்கட்டை மட்டும் போடுவேன்., அதோடு விளையாடுவேன்,எனக்கு 8வயது இருக்கும் போது எங்கள் குடும்பம் புது வீட்டுக்கு குடி புகும் சில நாட்கள் முன்னர் ‘டாமி’ இறந்து விட்டது. சொந்தமாக நாங்கள் வீடு கட்டி செல்வதன் மகிழ்ச்சி கொஞ்சம் கூட இல்லை எனக்கு ‘டாமியின்’ இறப்பு சின்ன வயதில் எனக்கு பெரும் தனிமையை தந்தது எனக்கு. வீட்டில் நான் ஒரு பையன் பள்ளியில் வந்து என்னோடு விளையாட அண்ணன் , தம்பி, அக்கா, தங்கை என்று யாரும் கிடையாது எனக்கு , இந்த உறவு மொத்தமாக சேர்ந்தது போல் எனக்கு ‘டாமி’ இருந்தது எனக்கு.
18-19 வயதில் அப்போது நான் இருந்த தெருவில் ‘ஜிம்மி’ என்று ஒரு நாயை எங்கள் தெருவில் ஒரு அண்ணா எங்கிருந்தோ கூட்டி வந்தார் , ஒரு நாள் நான் கல்லூரி முடிந்து வீட்டு கேட்டுக்குள் நுழையும் போது என் பின்னாடி வந்து கையை தூக்கி சேக் ஹேண்ட் தந்தது எனக்கு ‘ஜிம்மி’. ‘டாமி’ நாய்க்கு பிறகு நான் பிஸ்கட் போட்ட நாய் ‘ஜிம்மி’தான், நான் முதல் பிஸ்கட் போட்ட போது சாப்பிட்டு விட்டு மீண்டும் இன்னொன்று வேண்டும் என்பதுபோல் என்னை பார்த்தது அந்த பார்வையிலிருந்து ‘ஜிம்மிக்கும்’ எனக்கும் நெருக்கம் அதிகமாக ஆனது, ஏனென்றால் நானும் உறவுகள் வீட்டிற்க்கு சென்றால் உணவு உன்னும் போது ஏதாவது உணவு எனக்கு பிடித்து இருந்தால் மீண்டும் வேண்டும் என்று வாயை தீறந்து கேட்கமாட்டேன் மாறாக ‘ஜிம்மி’ போல் இன்னமும் வேண்டும் என்பதுபோல் பறிமாறுபவர்களை என் தலையை மட்டும் நிமிர்த்தி பார்ப்பேன்..

எனக்கும் ‘ஜிம்மி – டாமீ ’ நாயுக்கும் இருந்த உறவு மிக நெருக்கமானவை என் வீட்டில் என் அம்மா வரும் வரை ‘டாமி’ என்னோடு தான் இருக்கும் ‘அம்மா-அப்பா ‘ வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள குடும்ப உறவுகளிடம் விட்டு செல்வது போல் ‘டாமீ ’ நாய் என் அப்பா-அம்மா கேட்டுக்கொள்ளாமலே என்னை பார்த்துக்கொண்டது.
நம் குழந்தை பருவத்தில் நம் அப்பா- அம்மா நம்மை வளர்த்திருப்பர் ஆனால் அவர்களே முதுமையடைந்த குழந்தையாக மாறும் போது நாம் அவர்களிடம் கடுமையாக நடக்கும் படி ஏற்படும். அது போல் தான் இப்போது நம் சமூகத்தில் நாய்கள் பிரச்சனை பெரும் இடர்பாடுகளாக ஏற்பட்டு உள்ளது.
வண்டியில் வந்து இரும்பு சங்கிலி போட்டு நாய்களை கொல்வது என்பது கொடுமையான ஒன்று, சொரியாசிஸ், மற்ற நோய்கள் உள்ள நாய்களை பிடித்து அவற்றை தெருவில் மீண்டும் விடாமல் இருப்பது நல்லது.
சமூகத்தில் நடக்கும் தவறுகள் , பெருகி வரும் போதை பொருள் கலாச்சாரம் , மனிதர்களிடம் அன்பு குறைந்து கொண்டு வருகிறது இது போல் சமூக மக்களிடையே பண்பு இல்லாமல் , பொறாமை, கோபம் போன்றவையும் ஓங்கி வருகிறது , இவற்றை மனிதன் கண்டுகொண்டு சரி செய்வது இல்லை , கொரானா போன்று நாய்கள் மூலம் புது வைரஸ் தொற்று ஏற்ப்பட்டு மீண்டும் லாக்டவுன் நடைமுறை ஆவதுக்குள் மனிதர்களாகிய நாம் நமக்குள் அன்பு கொள்வோம் , நட்பு பாராட்டுவோம் .
நாய்களுக்கு மோப்ப சக்தி ஜாஸ்தி சமூகத்தில் மனிதர்களிடம் ஏற்படும் மாற்றத்தை மோப்பம் பிடித்து நாய்கள் மக்களை துன்புறுத்தாது என்பதை நம்புவோம் , அன்புகொள்வோம், நாய்கள் குழந்தைகளை கடிக்க வந்தால் நாய்களை மெல்ல அடிக்கவும் செய்வோம் நாயும் நம் பெற்றெடுக்காத குழந்தைதான்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!