`வேலை, திருமண வாழ்வு வேண்டாம்..!' - கப்பலில் வாழ்ந்து வரும் பெண்; வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?
அமெரிக்காவை சேர்ந்த லின்னெல் என்பவர் Poverty to Paradise என்ற யூடியூப் சேனலை உருவாக்கி, தான் வாழும் கப்பல் அனுபவங்கள் குறித்து அதில் பதிவிட்டு வருகிறார்.
2024 ஆம் ஆண்டில் அவர் பலவிதமான நெருக்கடிகளை சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர் தனது வீட்டை விற்று, வேலை திருமண வாழ்வு என அனைத்தையும் துறந்து கடலில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க எண்ணி இருக்கிறார். இதற்காக கப்பலில் தனது முழு நேர வாழ்வையும் வாழ தொடங்கியிருக்கிறார்.
ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அதில் தனது அனுபவம் குறித்து பகிர்ந்து வந்துள்ளார்.
கப்பல் பயணங்களில் வாழ்வது ஒரு ஆடம்பர வாழ்வு என பலரும் எண்ணிக் கொண்டிருக்கையில் இவர் நிதி நெருக்கடியை சமாளிக்க இது போன்ற ஐடியாவை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.

கப்பலில் வாழும் பெண்
பயண வீடியோக்கள் மூலம் யூடியூபில் அவர் பணம் சம்பாதித்து வருகிறார். உணவு மற்றும் போக்குவரத்திற்காக மாதத்திற்கு சராசரியாக $ 2,102 (ரூ.1,85,292) செலவு செய்கிறார். இந்த மாதந்திர செலவு அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தனி நபர் செலவிடும் சராசரியை விட குறைவு என்கின்றார் லின்னெல்.
கடந்த ஆண்டு மட்டும் இவர் 267 இரவுகளை கப்பல் பயணங்களில் கழித்திருக்கிறார். கார்னிவல் மற்றும் ராயல் கரீபியன் ஆகிய நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்.
இந்த வாழ்க்கை முறை, அளிக்கும் சுதந்திரத்தை தான் முழு மனதோடு ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். எதிர்கால பயணங்களையும் திட்டமிட்டு முன்பே முன்பதிவு செய்து விடுவாராம்.
தனது அனுபவங்கள் குறித்து பேசிய அவர் ”சுதந்திரம் என்பது எனக்கு ஒரு தனிப்பட்ட தேர்ந்தெடுப்பு. மற்றவர்கள் அதை எப்படி புரிந்து கொண்டாலும் ஆதரித்தாலும் அது என்னுடையது. உண்மையான சுதந்திரம் என்பது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை உங்களது சொந்த விருப்பப்படி, விதிமுறைப்படி வாழ்க்கை வாழ்வதுதான் சுதந்திரம்" என்று அவர் கூறுகிறார். பாரம்பரிய விதிகளிலிருந்து விலகி ஒரு சுதந்திர வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்ததாகவும் அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!