The Rock: ஆளே மாறிப்போன டுவெய்ன் ஜான்சன்; ரசிகர்கள் ஷாக் ஆக காரணம் என்ன?
பல ஆண்டுகள் உழைத்தும் மறுக்கப்பட்ட பதவி; அதே நிறுவனத்தை வாங்கி CEO ஆன பெண்; ஓர் அடடே ஸ்டோரி!
நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த பெண்ணிற்குத் தலைமைப் பொறுப்பு மறுக்கப்பட்ட பின், அதே நிறுவனத்தை வாங்கி தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் ஜூலியா ஸ்டீவர்ட் என்பவர்.
ஜூலியா ஸ்டீவர்ட் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள்பீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது, நிறுவனத்தின் முன்னேற்றங்களுக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.
இதற்காக புதிய குழுவை உருவாக்கி, நிறுவனத்தின் நிலையை மேம்படுத்தியிருக்கிறார். நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரட்டிப்பாகி, வளர்ச்சியடைந்துள்ளது. இதனால், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிக்குத் தான் தகுதியானவர் என அவர் நம்பியிருக்கிறார்.

ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதவிக்கு ”நீங்கள் இல்லை" என்று மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த மறுப்பு அவருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.
இதற்காக அவர் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாகச் செயலில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அதன் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து, அதனால் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்திருக்கிறார்.
இதனையடுத்து ஜூலியா ஐஹாப் (IHOP) நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று, தொடர்ந்து தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில் ஆப்பிள்பீஸ் நிறுவனம் மீண்டும் அவரது கவனத்திற்கு வந்துள்ளது. ஆப்பிள்பீஸ் நிறுவனத்தை ஜூலியா கடன் வாங்கி வாங்கியிருக்கிறார்.
கையகப்படுத்தலுக்குப் பிறகு, ஆப்பிள்பீஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியைப் பணி நீக்கம் செய்துவிட்டு அவரே அதனை எடுத்து நடத்தி வந்துள்ளார்.
ஆப்பிள்பீஸ் நிறுவனம் தர மறுத்த தலைமைப் பதவியை அவரின் உழைப்பின் மூலம் மீண்டும் அடைந்திருக்கிறார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!