மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!
மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜராங்கே இன்று(செப். 2) தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு திரண்டுள்ளனா்.
மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது. இதனிடையே, மராத்தா இடஒதுக்கீட்டில் அரசுக்கும் அந்தப் பிரிவினருக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, மும்பையில் ஆஸாத் மைதான் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜராங்கே இன்று(செப். 2) தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.