செய்திகள் :

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

post image

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் போன்றவை உள்ளன. தற்போது, கம்பி இணைப்பற்ற 5 ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அதிக பயனர்களைக் கொண்டு ஜியோ முன்னிலை வகித்து வருகிறது.

2025 ஜூலை நிலவரப்படி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ஜி யோ நிறுவனம் கம்பிவடமற்ற 5 ஜி இணைப்பில் 3,37,789 பயனர்களைக் கொண்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் 2,11,072 கம்பிவடமற்ற 5 ஜி பயனர்களைக் கொண்டுள்ளது.

எனினும் மாதாந்திர பயனர்களின் விகிதத்தில் ஜூலை நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் 12.12% பயனர்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் 5.53% பயனர்களை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள் ஏர்டெல் சேவையை விரும்புவதை இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

எனினும், ஒட்டுமொத்தமாக இதுவரை 64.45 லட்சம் 5 ஜி பயனர்களை ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 19.53 லட்ச பயனர்களை மட்டுமே கொண்டுள்ளது. (ஜூலை 2025 நிலவரம்)

தொலைத்தொடர்பு சேவையில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், பிரீமியம் 5 ஜி பயனார்கள் கொண்ட சந்தையை ஆக்கிரமிப்பதையே இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் 50.62% சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதேகாலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 31.18% பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. எஞ்சிய 18% பங்குகள் பிஎஸ்என்எல், வோடாஃபோன் - ஐடியா போன்ற மற்ற நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இதையும் படிக்க | இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

Jio Continues to Lead 5G FWA Subscriber Addition in India

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க

ஜம்முவிலிருந்து பழங்கள் எடுத்துச் செல்வது கடுமையாக பாதிப்பு: ‘சரக்கு ரயில் சேவை அவசியம்!’ -மெஹபூபா முஃப்தி

ஜம்மு - காஷ்மீரில் மழைக்காலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அங்கிருந்து பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் அதனால் மேற்கண்ட உணவுப் பொர... மேலும் பார்க்க

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜ... மேலும் பார்க்க

ரூ. 20 ஆயிரத்தில் அதிக பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்! ரியல்மி 15டி அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நடுத... மேலும் பார்க்க