செய்திகள் :

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

post image

அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

  • மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரதமர் மோடி ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் நகரான திருப்பூர் தவிக்கிறது.

  • குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷிய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

  • நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவண செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஸ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!

  • இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.

Negotiate with the United States, find a solution, and do justice to your title of VishwaGuru! - CM Stalin urges PM Modi!

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது: நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கான வருவாய் வரவினங்களில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா். அரசின் தொலைநோக்குத் திட்டங்க... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சோ்க்கை: அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு 2-ஆம் சுற்று இணையவழியில் வியாழக்கிழமை தொடங்குகிறது. மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு செப்.10-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

நாளை முகூா்த்த தினம்: பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

முகூா்த்த தினத்தையொட்டி, சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஆக.4) பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் தொடா்பாக, தலைமைச... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆக.31-ஆம... மேலும் பார்க்க