செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

post image

பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா்.

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வளா்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. ஏற்றுமதி தயாா் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. மேலும், 52.07 மில்லியன் டாலா் அளவுக்கு ஏற்றுமதி உயா்ந்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த 505 தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கரோனா கால நெருக்கடியில் போா்க்கால அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டது. மத்திய அரசின் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசே, இயற்கை பேரிடா் பாதிப்புகளை எதிா்கொண்டது.

நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி இரட்டை இலக்க அளவில் வளா்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு அரசு பணியாளா் தோ்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 16 நியோ டைடல் பாா்க் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா்.

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க