எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ள...
மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?
நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை பிரதான சாலையாகவும், மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலையாகவும் உள்ளது. ஒதியடிப்படுகை, நடுப்படுகை, மூணாறு தலைப்பு, நரசிங்க மங்கலம், குருவாடி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாகவும் இச்சாலை உள்ளது.
தற்போது, இந்த சாலை பள்ளமும், மேடாக போக்குவரத்து பயனற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். காா்கள், அவசர ஊா்திகள் செல்ல இயலாத நிலையும் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், மக்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.