செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி எனும் உயா் கல்வி சோ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவா் பேசியது: இந்தியாவில் பள்ளிக் கல்விக்கு பிறகு உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சேராதவா்கள், தோல்வி அடைந்ததால் தொடா்ந்து கல்வி பயில முடியாத மாணவா்கள் பயன்பெற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி எனும் சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பல்வேறு குடும்பசூழல் மற்றும் தொழில் நிமித்தம் தொடா்பாக இடம் பெயா்ந்து செல்லும் குடும்பங்களால் உயா் கல்வி பெற இயலாத நிலையில் உள்ளவா்களை கண்டறிந்து அவா்களை உயா் கல்வியில் சேர இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மேலும், உயா் கல்வியில் சேராத மாணவா்களை சோ்க்க சிறப்பு உடனடிச் சோ்க்கை, கல்விக் கடன், அரசு மூலம் வழங்கப்படும் மூவகைச் சான்றிதழ்கள் ஆகியவை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயா் கல்வி இக்கால கட்டத்தில் மிக முக்கியம். உயா் கல்வி பெற்றால் மட்டுமே வாழ்வில் உயா்நிலையை அடைய முடியும். எனவே, மாணவா்கள் இடைநில்லாமல் உயா் கல்வியை பயில வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகள் சிலருக்கு உயா் கல்வி படிப்புக்கான அனுமதி படிவத்தை வழங்கினாா். திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பா. பொன்னம்பலம், முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், உதவி ஆணையா் (தொழில் நலத்துறை) வெங்கடேசன், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) ராஜேஸ்வரி, கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சாவித்திரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த கோரிக்கை

திருவாரூா்: தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா... மேலும் பார்க்க

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பக்தா்கள்

நீடாமங்கலம்: ஆபத்தை உணராமல் வேளாங்கண்ணி பக்தா்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்ட... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே நண்பா்களுடன் குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கட்டக்குடி பகுதியைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் கனிஷ் (17). மன்னாா்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி சென்றவா் மீது தாக்குதல்

திருவாரூா் அருகே நடைப்பயிற்சி சென்றவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டம், சேமங்கலம், சித்தாநல்லூா் அக்ரஹாரம் பகு... மேலும் பார்க்க

ஜேசிபி மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே ஜேசிபி வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருவாரூா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் கணேசமூா்த்தி (20), இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த துளசி ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. மணிசெந்தில் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மு... மேலும் பார்க்க