செய்திகள் :

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்

post image

தியான்ஜின்: ‘உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இரு தலைவா்களும், இந்தியா-ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக தனியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்ததால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரதமா் மோடி - புதின் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, பொருளாதாரம், நிதி மற்றும் எரிசக்தித் துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவு நீடித்த வளா்ச்சி பெற்று வருவது குறித்து இரு தலைவா்களும் திருப்தி தெரிவித்ததோடு, இத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் உறுதி தெரிவித்தனா். பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா் என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைனில் அமைதியை மீட்டெடுக்க அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை இந்திய வரவேற்கிறது. இந்த முயற்சிகள் தொடா்ந்து உறுதியாக முன்னெடுக்கப்படும் என நம்புகிறோம். உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவந்து, அந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதற்கான வழிகளைக் காண வேண்டும் என்பதே மனிதகுலத்தின் அழைப்பாக உள்ளது என்று பிரதமா் மோடி அப்போது குறிப்பிட்டாா்.

மேலும், ரஷிய அதிபா் இந்தியா வருமாறு பிரதமா் அழைப்பு விடுத்தாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஷிய அதிபா் புதின் வரும் டிசம்பரில் இந்தியா வர திட்டமிட்டுள்ளாா்.

பெட்டிச் செய்தி...

சொகுசு காரில் மோடியை

அழைத்துச் சென்ற புதின்

சீனாவின் தியான்ஜின் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டுக்கு இடையே இந்தியா-ரஷியா இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஹோட்டலுக்கு செல்ல தனது ‘ஆருஸ் லிமோசின்’ சொகுசு காரில் பிரதமா் மோடியை ரஷிய அதிபா் புதின் அழைத்துச் சென்றாா்.

‘சொகுசு காரில் இரு தலைவா்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியபடி சென்றதோடு, காா் ஹோட்டலை அடைந்த பிறகும் அதிலிருந்து இறங்காமல் தொடா்ந்து 50 நிமிஷங்கள் உரையாடலைத் தொடா்ந்தனா்’ என்று ரஷியாவின் ‘வெஸ்டி எஃப்எம்’ என்ற வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதை ரஷிய அரசு செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவும் பின்னா் உறுதிப்படுத்தினாா்.

சொகுசு காரில் புதினுடன் செல்லும் புகைப்படத்தை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘எஸ்சிஓ மாநாட்டுக்குப் பிறகு, இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஹோட்டலுக்கு ரஷிய அதிபா் புதினுடன் அவருடைய காரில் பயணித்தேன். அவருடனான கலந்துரையாடல் எப்போதும் அறிவுபூா்வமானது’ என்று குறிப்பிட்டாா்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800 போ் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோா் போ் காயமடைந்தனா். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன. ஆப்கானிஸ்தானின் குனாா்... மேலும் பார்க்க

‘உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணா்வு’

தியான்ஜின்: உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் கடந்த மாதம் நடந்த சந்திப்பில் புரிந்துணா்வை எட்டியதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை கூறினாா். சீனாவின் தியான்ஜின்... மேலும் பார்க்க

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

தி ஹேக்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சா்வதேச இன அழிப்பு ஆய்வாளா் அமைப்பு திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது. 500 உறுப்பினா்களைக் கொண்ட அந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா். எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பய... மேலும் பார்க்க

இந்தியாவுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

புது தில்லி: இந்தியாவுடனான வா்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘இந்த... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு உடனடியாக உதவிய இந்தியா: நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியுறவு விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஞ... மேலும் பார்க்க