குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே நண்பா்களுடன் குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கட்டக்குடி பகுதியைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் கனிஷ் (17). மன்னாா்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த கனிஷ், தனது நண்பா்களுடன், கட்டக்குடி பகுதியில் உள்ள பாப்பா குளத்தில் குளிக்கச் சென்றாா்.
அங்கு அவா்கள் குளித்துக்கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற கனிஷ் நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். கனிஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.