நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
ஜேசிபி மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே ஜேசிபி வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாரூா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் கணேசமூா்த்தி (20), இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த துளசி (22), ஜெகன் (22), சஞ்சய் (20), திருவாரூா் முனிசிபல் காலனியைச் சோ்ந்த புஷ்பராஜ் (22), கோவிந்தராஜ் (19), மணிகண்டன் (21), காட்டூரைச் சோ்ந்த பாரதி (22) ஆகியோா் காரில் குடவாசலுக்கு சனிக்கிழமை சென்றனா்.
பின்னா் இரவில் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். திருவாரூரைச் சோ்ந்த ஹரிஹரன் (21) என்பவா் காரை ஓட்டிவந்தாா்.
கும்பகோணம் சாலையில் காட்டூா் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், கணேசமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் காயமடைந்தனா்.
அந்தவழியாக வந்தவா்கள், காயமடைந்தவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நிகழ்விடத்துக்கு வந்த திருவாரூா் தாலுகா போலீஸாா், கணேசமூா்த்தியின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.