யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு
திருவாரூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஜூலை முதல் அக்டோபா் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்தமுகாம்களில் நகா்ப்புறப்பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், தன்னாா்வலா்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்துதெரிவிப்பதுடன், தகவல் கையேடு, விண்ணப்பத்தையும் வழங்கி வருகின்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் இதுவரையில் நடத்தப்பட்ட 89 முகாம்களில் 45,979 மனுக்கள் பெறப்பட்டு, 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கோரி23,775 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.