கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; எ...
சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு
சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக ஒருமணி நேரத்தில் 271.5 மி.மீ மழை அளவு கொட்டித் தீர்த்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. 11 மணிக்கு தொடங்கிய மழை ஒருமணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. குறிப்பாக வடசென்னையில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்தது.
கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் மேக வெடிப்பு காரணமாகவே சென்னையில் அதிகளவில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்: பலத்த பாதுகாப்பு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையளவு விவரம்(மி.மீட்டரில்):
மணலி- 271.5
மணலி புது டவுன்- 255.6
விம்கோ நகர்-228.6
கொரட்டூர் மண்டலம் 7- 182.4
எண்ணூர் - 150
கத்திவாக்கம்- 136.5
திருவொற்றியூர்-126
அயப்பாக்கம்- 121.8
பாரிஸ்-115.5
அம்பத்தூர்- 112.2
நெற்குன்றம்- 110.1
கொளத்தூர் - 96.6
காசிமேடு - 95.1
இதனிடையே ஞாயிறு இரவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இடியுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளதாக டெல்டா வெதர்மேன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.