Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்...
பஞ்சாபில் வெள்ளம்: ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா பேச்சு
பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.
பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளத்தால் குருதாஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாபில் 253.7 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு மழை பெய்துள்ளது என்று தெரிவித்தனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எழுதிய கடிதத்தில், பஞ்சாப் கடந்த பல தசாப்தங்களில் கண்ட மிக மோசமான வெள்ள பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 250 பேர் பலி?
இந்த வெள்ளம் சுமார் 1,000 கிராமங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் என்று அதிகாரிகள் கூறினர்.
அப்போது வெள்ள நிலையை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இருவருக்கும் அவர் உறுதியளித்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.