எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து க...
விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!
சென்னை: விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் மன்னிப்புக் கோரினார்.
விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கை மற்றும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
விதி மீறல் கட்டடங்கள் பற்றி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்த வழக்கில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர்.