செய்திகள் :

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: பரிசுத் தொகை 4 மடங்கு அதிகம்!

post image

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் பரிசுத் தொகை கடந்த முறையைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

மொத்த பரிசுத் தொகை 1.38 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பின்படி, ரூ. 122 கோடியாகும். கடந்த 2022 உலகக் கோப்பை தொடரில் 35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அதேபோல், கடந்த 2023 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் போது பரிசுத் தொகையாக வழங்கப்பட்டதைவிட (ஒரு கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகமாகும்.

யாருக்கு எவ்வளவு பரிசு?

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ. 39.54 கோடி (கடந்த முறையைவிட 239 சதவிகிதம் அதிகம்).

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 19.77 கோடி.

அரையிறுதியில் வெளியேறும் இரண்டு அணிகளுக்கும் தலா ரூ. 9.88 கோடி.

பிற இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு அதற்கேற்றவாறு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் நடத்தப்படுவார்கள் என்பதை உறுதி செய்யவே நான்கு மடங்கு பரிசுத் தொகையை அதிகரித்துள்ளோம் என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

The prize money for the ICC Women's ODI World Cup has been announced to be four times higher than the last edition.

இதையும் படிக்க : முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

தொடர்ச்சியாக மூன்றாவது கோப்பையை வென்ற ஓவல் அணி!

தி ஹன்ட்ரெட் தொடரை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஓவல் இன்வின்சிபிலஸ் அணி வென்று சாதனை படைத்துள்ளது. சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் அணி இறுதிப் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ... மேலும் பார்க்க

டிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்றது வெஸ்ட் தில்லி!

வெஸ்ட் தில்லி அணி தில்லி பிரீமியர் லீக்கில் முதல்முறையாக கோப்பையை வென்றது. நிதீஷ் ராணா தலைமையில் வெஸ்ட் தில்லி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. தில்லி பிரீமியர் லீக் கடந்தாண்டு திடங்கிய உள்ளூர் டி2... மேலும் பார்க்க

“இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருந்தது...” -புஜாராவைப் பாராட்டிய பிரதமர் மோடி!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சேதேஷ்வர் புஜாராவைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 31) அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.பிரதமர் மோட... மேலும் பார்க்க

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

தில்லி பிரீமியர் லீக்கில் குவாலிஃபயர் 2 போட்டியில் வெஸ்ட் தில்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா ஆட்ட நாயகன் விருது பெற்றார். தில்லி பிரீமி... மேலும் பார்க்க

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் தவினா பெர்ரின் அதிவேகமாக சதம் அடித்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆடவர் பிரிவிலும் சேர்த்து ஒரு பந்து அதிகமாக பிடித்து, இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார... மேலும் பார்க்க

வைட் பந்தை அடிக்கச் சென்று ஆட்டமிழந்த ஷாய் ஹோப்..! வைரல் விடியோ!

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷாய் ஹோப் ஆட்டமிழந்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரீபியன் பிரீமியர் லீக்கில் வைட் பந்தை அடிக்கச் செல்லும்போது ஸ்டம்பில் பேட் பட்டு வித்தியாசமாக ஹிட் - விக்கெட் ஆனார்... மேலும் பார்க்க