டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா - மனோஜ் பாஜ்பாயி!
இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மனோஜ் பாஜ்பாயி உடன் ராம் கோபால் வர்மா இணைந்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மனோஜ் பாஜ்பாயி நாயகனாக நடிக்கிறார்.
’போலிஸ் ஸ்டேஷன் மெயின் பூத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஹாரர் நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளத
A DREADED GANGSTER is KILLED by an ENCOUNTER COP and he COMES BACK as a GHOST to HAUNT the POLICE STATION ..Hence the title “POLICE STATION MEIN BHOOT” You Can’t Arrest The Dead @BajpayeeManoj@geneliad@VauveEmirates@KarmaMediaEnt#uentertainmenthub#PoliceStationMeinBhootpic.twitter.com/eMOyusT8iy
— Ram Gopal Varma (@RGVzoomin) September 1, 2025
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் கடைசியாக சத்யா எனும் படத்தில் பணியாற்றி இருந்தார்கள்.
இந்திய சினிமாவில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய படத்தில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்துள்ளதாகவும் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.