2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!
"என்னை பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்கிறார்கள்; ஆனால்..."- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி
'தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்கள் நாடுமுழுவதும் கலவையான விமர்சனங்களைப் பெற்று பேசுபொருளாகி இருந்தன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் சமீபத்தில் "பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது" என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
அதுமட்டுமின்றி 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான, இந்துத்துவா பிரச்சார நெடியில் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்ற விமர்சனங்களும் பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் தன்மீதான விமர்சனங்கள் குறித்து NDTV-யின் பிரத்தேக நேர்காணலில் பேசியிருக்கும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "நான் அரசியல் படம் எடுக்கிறேன், அதற்காக நான் அரசியல்வாதியல்ல. என்னுடைய திரைப்படங்களுக்கு எதிர்ப்புகள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அரசியல் படம் எடுப்பதால் என்னை பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்றெல்லாம் என்னை விமர்சிப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
அரசியல் படங்கள், கசப்பான உண்மைகளை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பேன். போர் பற்றிய ஆயிரம் படங்கள் இருக்கின்றன, அப்படியிருக்கையில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' போன்ற சமூக பிரச்னைகளைப் பற்றி பேசும் படங்கள் ஏன் எடுக்கக்கூடாது" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs