யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
Sunny Leone: `குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை; கடவுள் வெறுப்பதாக நினைத்தேன்’ - சன்னி லியோன்
பிரபல நடிகையாக இருந்த நடிகை சன்னி லியோன், திரைத்துறையிலிருந்து சற்று விலகி, தனது குடும்ப வாழ்வில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த இவர், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் கனடாவில் மாடலிங் துறையிலும் நடிப்பிலும் வலம் வந்த சன்னி லியோன், இந்தியாவிற்குக் குடிபெயர்ந்து 2011-ஆம் ஆண்டு ஹிந்தி ‘பிக் பாஸ்’ மூலம் இந்திய ரசிகர்களிடையே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, பாலிவுட் ஹீரோயினாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

டேனியல் வெபர் என்பவரை மணந்த சன்னி லியோன், 2017-ஆம் ஆண்டு நிஷா கௌர் வெபர் என்ற மகளை தத்தெடுத்தார். பின்னர் 2018-ஆம் ஆண்டு நோவா, ஆஷர் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் சரோகஸி முறையில் அவருக்குப் பிறந்தனர். திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் சன்னி லியோனுக்கு இப்போது குழந்தைகள்தான் அவரது மொத்த உலகமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது குறித்தும் தாய்மை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கும் சன்னி லியோன், "எனது 38 வயதில் நான் திருமணமாகி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தபோது எனக்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது. 6-10 மாதங்கள் இயற்கையாகவே குழந்தைகள் பெற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், நான் கர்ப்பமானபோது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்தவித வளர்ச்சியும் இல்லை, குழந்தைப் பெற்றுக் கொள்வது கஷ்டம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற பல முயற்சிகளை செய்துபார்த்தும் பலனில்லை. கடவுள் எனக்கு குழந்தை பெறும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டேன்.

ஆனால், அப்போதுதான் நாம் ஏன் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கக்கூடாது என்ற யோசனை வந்தது. நிஷா கௌர் வெபர் எங்களுக்கு மகளாக கிடைத்தார். அதன்பின் சரோகசி (Surrogacy) முறையில் நோவா, ஆஷர் என இரட்டைக் குழந்தைகள் கிடைத்தனர். கடவுள் எங்களை மிகவும் நேசிக்கிறார் என்று இப்போது உணர்கிறேன்." என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...