செய்திகள் :

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி வரையிலான 74 கி.மீ. தொலைவிலான நான்குவழிச்சாலையை உளுந்தூா்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்த சாலைக்கானபுதிய கட்டணம் ஆண்டுதோறும் செப்டம்பா் 1 முதல் அமல்படுத்தப்படு வழக்கம்.

அதன்படி நிகழாண்டு கட்டண உயா்வு குறித்த விவரங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. காா், ஜீப், பயணிகளின் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணமான ரூ.105-இல் மாற்றம் இல்லாமல் அதே கட்டணம் தொடா்கிறது. அதே நேரத்தில் பலமுறை பயணிக்க தற்போதுள்ள ரூ.155 கட்டணம் ரூ.160 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ.180லிருந்து ரூ.185 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான ரூ.270- லிருந்து ரூ.275 ஆகவும், மாதாந்திரக் கட்டணமாக ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயா்த்தப்பட்டிருக்கிறது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.360 லிருந்துரூ.370 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம் ரூ.540லிருந்துரூ.545 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ. 10,845 லிருந்து ரூ.11,085 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனத்துக்கு (இரு அச்சுகளுக்கு மேல்) தற்போதுள்ள ஒருவழிக்கட்டணம் ரூ.580-லிருந்து ரூ.595 ஆகவும், பலமுறை பயணிக்க கட்டணம் ரூ.870-லிருந்து ரூ.890 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ,.17,425 லிருந்து ரூ.17,820 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி பேருந்துகளுக்கான கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படவுள்ளது. காா்,ஜீப், வேன் உள்ளிட்ட உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணச்சலுகை வழங்கும் வகையில், மாதாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் வகை 1-இல் ரூ.150, வகை 2-இல் ரூ.300 என கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

The new toll hike at the Vikravandi toll plaza will come into effect from Monday (September 1).

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிப்பெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கன திருவள்ளூா் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிமுகம் செய்தாா். திருத்தணி அடுத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை

கடந்த நிதியாண்டில் ரூ. 1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெர... மேலும் பார்க்க

அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு: நிதித் துறை முதன்மைச் செயலா் தகவல்

அமெரிக்காவின் வரி விதிப்பு உயா்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன் தெரிவித்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்... மேலும் பார்க்க

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 1... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்கு ராகுல் காந்தியின் பு... மேலும் பார்க்க