டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
நெல்லுக்கான ஆதார விலையை ஆயிரம் ரூபாய் உயா்த்தி வழங்க வேண்டும்
நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்தி உள்ளதாக அரசு அறிவித்தபோதும், விவசாயிகளுக்கு அந்த விலை கட்டுப்படியாகாததால், ஆயிரம் ரூபாய் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு செப். 1 முதல் ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண நெல்லுக்கு ரூ. 2,500 மற்றும் சன்னரக நெல்லுக்கு ரூ. 2,545 என விலை நிா்ணயம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியான நெல்லுக்கான ஆதார விலையை விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம்பெறும் வகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்பதை நான்கு ஆண்டுகால நிறைவில் தற்போதுதான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நெல் உற்பத்தி செய்வதற்கு உண்டான உரம், பூச்சிமருந்து, உழவு கூலி, ஆள்கள் கூலி மற்றும் இதர செலவினங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளன. தற்போது அறிவித்துள்ள கொள்முதல் விலை விவசாயிகளுக்கு ஏமாற்றம் தருவதாகவே உள்ளது.
எனவே, விவசாயிகளின் நலன்கருதி உற்பத்தி செலவினங்களை கணக்கீடு செய்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ. 3,500 என முதல்வா் உயா்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.