ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்
விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச் சென்றார். இனாம்ரெட்டியபட்டி - ஓ. சங்கரலிங்காபுரம் சாலையில் தனியார் பட்டாசு ஆலை அருகே சென்ற போது மும்மூடி அணிந்த படி சொகுசுக்காரில் வந்த 3 மர்ம நபர்கள் நாகராணி கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலியுடன் கூடிய 6 சவரன் தங்க செயின் மற்றும் 2 செல்போன், ரூ.1,500 பணத்துடன் கைப்பையையும் பறித்துச் சென்றனர். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வந்தனர்.

வழிப்பறி செய்த கும்பல் காரில் கன்னியாகுமரி, திருநெல்வேலி சென்று விட்டு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகத் தப்பிச் செல்வதாக விருதுநகர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனை டுத்து விருதுநகர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீஸார் காரில் தப்பிக்க முயன்ற வழிப்பறி செய்த 3 பேர் கொண்ட கும்பலை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நெல்லையை சேர்ந்த சுரேஷ், சேலத்தைச் சேர்ந்த அஜித் குமார் மற்றும் திருச்சி திருச்சியை சேர்ந்த பால்குமார் என்பது தெரியவந்தது. சிறையில் இந்த மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் காரை சோதனை செய்ததில்