செய்திகள் :

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" - காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

post image

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது.

இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர்.

மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இன்று மருத்துவமனையிலிருந்து வெளியிட்ட வீடியோவில், "மருத்துவர்கள் வழக்கம்போல 'நீங்கள் இதைப் பண்ணாதீர்கள், விட்டுவிடுங்கள்' என்றுதான் சொன்னார்கள். ஆனால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக இல்லை.

இது மாணவர்களின் பிரச்னை. கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் பல இக்கட்டுகளை சந்தித்துவருகின்றனர். பல ஃப்லோஷிப்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன, ஸ்காலர்ஷிப்கள் நேரத்துக்கு வருவதில்லை...

எஸ்.எஸ்.ஏவில் குழந்தைகளுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிக்கொடுக்க வேண்டியது எம்.பியாக என்னுடைய கடமை மட்டுமல்ல, நம் எல்லோருடைய கடமையும் கூட.

உண்ணாவிரதப் போராட்டம்

இதில் கட்சி, அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் குரல்கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மாணவர்களுடன் நிற்க வேண்டுமென எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக்கொள்கிறேன்.

நாம் பேசாவிட்டால் இது கடந்து செல்லும் விஷயமாக மாறிவிடும். இதனை ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், கல்வி அமைச்சருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதுவரையில் உண்ணாவிரதம் தொடரும்" எனப் பேசியுள்ளார்.

எஸ்.எஸ்.ஏ என்பது சர்வ ஷிக்‌ஷா அபியான் (SSA) என்ற மத்திய அரசின் 'அனைவருக்கும் கல்வி திட்டம்'. இதன் நிதி மத்திய மாநில அரசுகளால் பகிரப்படுகிறது.

இதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பங்கு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் சம்பளம், பள்ளி பராமரிப்பு, இலவச பாடநூல்/உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏமன்: ஹௌதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொலை - யார் இவர்?

கடந்த ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெறும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏமனில் ஹௌதி கட்டுப்பாட்டில் உள... மேலும் பார்க்க

மாட்டுக்கறி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்... மேலும் பார்க்க

சம்பல் கலவரம்: `இந்துக்கள் 15% சரிவு, முன்பு தீவிரவாத தளம்' - விவாதங்களைக் கிளப்பிய விசாரணை அறிக்கை!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.450 பக்கங்கள் கொண... மேலும் பார்க்க

``947 வாக்காளர்கள் ஒரே வீட்டில்..."- காங்கிரஸின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை... மேலும் பார்க்க

Modi: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - பின்னணி என்ன?

2022-ம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை. ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந... மேலும் பார்க்க