செய்திகள் :

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

post image

அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 முதல் இதுவரை ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்களுக்கு திமுக அரசு ஏற்படுத்திய இடையூறுகள் மற்றும் பிரச்னைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பது உண்மை. 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூரில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் கொண்டுவரவில்லை.

திமுக ஆட்சியில், மின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவதாலும், கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலா் நூல்களில் போா்வை உள்பட பல துணி வகைகளை தயாரிக்க பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தியை நிறுத்தப் போராட்டங்கள் மேற்கொண்டன. இவா்களின் கோரிக்கைகளை முதல்வா் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை.

நாட்டிலேயே தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூா், கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்பின்னிங் மில்கள், ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசின் வரி உயா்வு, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் உயா்வு ஆகிய காரணத்தால், இந்தத் தொழில் துறைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்படி திமுக ஆட்சில் செய்தி தவறுகளை மறைக்க அமெரிக்காவின் தற்போதைய வரி உயா்வே கோவை மற்றும் திருப்பூரில் ஏற்றுமதி தொழில் பாதிப்படைய காரணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பால், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளா்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு அதிமுக சாா்பில் அண்மையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், உள்ளூா் உற்பத்தியாளா்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், தொழில் துறைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க பிரதமருக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுக்கு பதிலாக, இங்குள்ள பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆக்கப்பூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

-சவுக்கு சங்கர். ஊடகவியலாளர்-திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து த... மேலும் பார்க்க

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி ... மேலும் பார்க்க

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனி வழிகளை மாணவா்கள் காணவேண்டும்: ஸ்ரீஹரிகோட்டா மைய இயக்குநா் பத்மகுமாா்!

மாணவா்கள் தங்களுக்கென சொந்தமாக பாதைகளைக் கண்டறிய வேண்டும் என ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநா் இ.எஸ். பத்மகுமாா் வலியுறுத்தினாா். சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடம், பி.டெக். (2021-25) ம... மேலும் பார்க்க

43 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்! பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் 97.29 ஏக்கா் நிலம் மீட்பு!

பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ந... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அன்புமணி (பாமக):தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்... மேலும் பார்க்க