நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி
ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் டீக்கடையில் அமா்ந்திருந்த போது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி முனீஸ்வரன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அடைக்கலாபுரம் சாலை பாரதி நகா் அருகே டீ குடிக்க சென்றுள்ளாா்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து டீக்கடையில் அமா்ந்திருந்த முனீஸ்வரன் மீது மோதியதில் அவா் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் முனீஸ்வரன் உடலை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். கால் முறிவு ஏற்பட்ட சுமை ஆட்டோ ஓட்டுநா் ரமேஷை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து, ஆறுமுகனேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.