நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். வீட்டில் அவரது தாயாா் சரஸ்வதி வசித்து வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, அதே தெருவில் உள்ள தனது மூத்த மகன் வீட்டுக்கு சரஸ்வதி சென்றுவிட்டாராம்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 4 பவுன் நகையை காணவில்லையாம்.
இதே போல், அதே தெருவில் வசித்து வரும் மாரியப்பன் மனைவி பகவதி (62), கடந்த வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு திரும்பினாராம்.
அங்கும், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது, 27 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்ததாம்.
இச்சம்பவங்கள் குறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.