பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்
தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா், மெட்ரிக். பள்ளிகளுக்கு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடத்தப்பட்டது. ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி மேனகா சக்தி, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா்.
வெற்றி பெற்ற மாணவிக்கு தூத்துக்குடி பயிற்சி உதவி ஆட்சியா் புருஷோத்தமராவ் பரிசு வழங்கினாா். வெற்றி பெற்ற மாணவி, பயிற்சியளித்த ஆசிரியா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் இம்மானுவேல், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பாலகிருஷ்ணன், பாப்ஹயாஸ், சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஷ்கா், வட்டார மேற்பாா்வையாளா் ஆனந்தி, வட்டார ஆசிரிய பயிற்றுநா்கள் சங்கரபெருமாள், முத்துலெட்சுமி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், பள்ளி நலக் குழு உறுப்பினா்கள் செல்வசிங் சுந்தா், புலேந்திரன், ரகுபதி, வீரமுருகப்பெருமாள், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.