செய்திகள் :

Doctor Vikatan: ஆசிரியர் வேலை, சாக்பீஸ் பயன்பாட்டால் தொண்டை எரிச்சல், வறட்டு இருமல்; தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: நான் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு அடிக்கடி தொண்டை எரிச்சலும் வறட்டு இருமலும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாக்பீஸ் அலர்ஜி என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா? இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை

உங்களுடைய தொண்டை எரிச்சல் மற்றும் வறட்டு இருமல் பிரச்னைக்கு, சாக்பீஸ் அலர்ஜி நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும். 

மூடப்பட்ட அறை அல்லது  வகுப்பறை சூழலில் தொடர்ந்து சாக்பீஸ் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் சாக்பீஸ் துகள்கள் கண்டிப்பாக தொண்டை எரிச்சலை ஏற்படுத்தலாம். அதன் விளைவாக மூக்கு சிவந்துபோவது, நீர் வடிதல் போன்றவை இருக்கலாம்.

சாக்பீஸ் துகள்கள் உள்ளே போகும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அதனால் ஆஸ்துமா, வீஸிங்  போன்றவை வரலாம்.

சிலருக்கு இது தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சரியாகிவிடும். அதுவே நீண்டகாலமாக இதுபோன்ற சூழலில் இருப்பவர்களுக்கு, இன்டர்ஸ்ட்ஷியல் லங் டிசீஸ் (Interstitial Lung Disease) என்ற பிரச்னை வரலாம்.

நுரையீரலை பாதிக்கும் இந்தப் பிரச்னையிலும் மூச்சுத் திணறல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவை வரலாம்.

சாக்பீஸ் உபயோகம் தவிர்க்க முடியாது என்ற கட்டத்தில், அந்த வகுப்பறையில் ஜன்னல்கள் இருக்க வேண்டும், அவை திறந்திருக்க வேண்டும்.

வகுப்பறையில் சாக்பீஸ் பயன்பாடு
வகுப்பறையில் சாக்பீஸ் பயன்பாடு

வகுப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான சாக்பீஸை பயன்படுத்துவதும் தீர்வாக இருக்கும். வாய்ப்பிருந்தால், சாக்பீஸ் பயன்பாடு இல்லாத போர்டு உபயோகிக்க முடியுமா என்று அதற்கான மாற்றுவழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா என்று பாருங்கள்.

சாக்பீஸ் பயன்பாட்டால் எல்லோருக்கும் பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மூச்சுத்திணறல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

நுரையீரல் சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் நுரையீரல் செயல்திறனுக்கான பரிசோதனையைச் செய்வார்கள். சிலருக்கு சிடி ஸ்கேன் தேவைப்படலாம். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

``தமிழரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்த சக்திகள்'' - மூப்பனார் நினைவு நாள் விழாவில் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. மூப்பனாரி... மேலும் பார்க்க

``நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' - ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின... மேலும் பார்க்க

``காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' - CPM பெ.சண்முகம்

"சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்" என சிபிஎம் மாநிலச்... மேலும் பார்க்க

``அதிமுக ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்; திமுக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது'' - வி.கே. சசிகலா

திமுக கூட்டணி, பாஜக - அதிமுக கூட்டணி, தனித்துக் களம் காணும் சீமான், உள்கட்சி பிரச்சினையால் கூட்டணி இழுபறியில் இருக்கும் பாமக, புதிதாக தேர்தல் களம் காணும் விஜய் என 2026 சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடு... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொதுநல மனுமதுரை அண்ணாநகரை சேர... மேலும் பார்க்க

``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,"உசிலம்பட்டி பகுதியில்... மேலும் பார்க்க