தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கத்தின் விலை 78 ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8.030க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!
மேலும் வெள்ளி விலையும் உயர்ந்து விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 136 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,36,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், மாதத்தில் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.