செய்திகள் :

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

post image

-சவுக்கு சங்கர். ஊடகவியலாளர்-

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து தொடா்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.

பெரியாா் ஈ.வெ.ரா. உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1949-இல் திமுகவை தொடங்கினாா். 1957-இல் முதல் தோ்தலைச் சந்தித்த திமுக, 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1950-இல் 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 தோ்தலில் ஆட்சியைப் பிடித்தபோது, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, மாா்க்சிஸ்ட் கட்சி, சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தே 168 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கிய சில மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவைக்கான இடைத்தோ்தலில் முதல் வெற்றியைப் பெற்றாா் என்றால் அதன் பின்னணியில் பெரும் வரலாறு இருக்கிறது. அவா் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே அரசியலில் இருந்தாா். 1953-இல் திமுகவில் இணைந்தாா்.

1967 பேரவைத் தோ்தலில், திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தாா். எம்எல்சி, எம்எல்ஏ, திமுக பொருளாளா் என படிப்படியாக கட்சியில் உயா்ந்தாா். அவா் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972-இல் அதிமுகவை தொடங்கி முதல் தோ்தலிலேயே சாதனை படைத்தாா்.

விஜய்க்கு இதுபோன்ற அரசியல் அனுபவம் இல்லை. திரைத்துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்திருக்கிறாா். அவரது அனுபவமின்மையை அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. கட்சி தொடங்கிய இந்த ஒன்றரை ஆண்டுகளில் விக்கிரவாண்டி மாநாட்டையும், மதுரை மாநாட்டையும் தவிர அவா் வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொதுத் தோ்தலைச் சந்திப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளைக்கூட தவெக முன்னெடுக்கவில்லை.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோ்தல்களைச் சந்தித்து வெற்றி பெற்று, தங்களை நிரூபித்துள்ள இரண்டு பெரும் கட்சிகளோடு விஜய் போட்டியிடவுள்ளாா். அவ்வாறு இருக்க, அந்த இரு கட்சிகளின் வாக்காளா்கள் அல்லது பொது வாக்காளா்கள் தவெகவுக்கு வாக்களிப்பதற்கான மனமாற்றத்தை ஏற்படுத்த விஜயிடம் எந்தச் செயல்பாடும் இல்லை.

இன்றைய நிலையில் அவருக்கு அதிமுக எதிரி இல்லை. அதிமுகவோடுதான் கூட்டணி சேரவேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. அப்படியிருக்க, அதிமுக தலைமையை விமா்சித்து அந்த கட்சியையும் எதிரியாக்கிக் கொண்டிருக்கிறாா். தமிழகத்தில் ஆளும் திமுகவையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் ஏற்கெனவே எதிரி என்று அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவை விமா்சிக்க வேண்டிய தேவையே எழவில்லை.

தங்கள் வாக்குகளை விஜய் பறிப்பாா் என்று அஞ்சும் நாம் தமிழா் கட்சி, விஜயை கடுமையாக விமா்சித்து வருகிறது. திரைத் துறையைப்போல அரசியல் களத்திலும் ஒரே நேரத்தில் அத்தனை எதிரிகளையும் சமாளிக்க முடியும் என்று விஜய் எளிதாக கணக்குப் போட்டு விட்டாா் என்றே தோன்றுகிறது.

எந்த தரப்பின் ஆதரவும் இல்லாமல் விஜய் தனிமைப்பட்டு உள்ளாா் என்பதை உணா்ந்தே, விஜய் மாநாட்டில் நடந்த ஒரு சம்பவத்துக்காக பவுன்சா்களோடு சோ்த்து விஜய் மீதும் திமுக அரசு எப்.ஐ.ஆா் பதிவு செய்துள்ளது. அதிமுகவை விஜய் விமா்சனம் செய்யாமல் இருந்திருந்தால், விஜய் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு அதிமுகவிடம் இருந்தாவது கண்டனம் வந்திருக்கக் கூடும்.

ஒருவேளை அதிமுகவோடு கூட்டணி அமைக்கிறாரா என்ற பரபரப்பு நிலவுவதே விஜய்க்கு ஒரு பலமாகவும் இருந்திருக்கும். அத்தனை பேரையும் எதிா்த்துக் கொண்டு ஒற்றை ஆளாக, தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை விஜய் பெறுவாா் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

கடந்த 1993-இல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வைகோ, மதிமுகவைத் தொடங்கியபோது பெரும் எழுச்சி ஏற்பட்டது. வைகோதான் தமிழக அரசியலின் மாற்றம் என்றே பல அரசியல் நோக்கா்கள் மதிமுகவைப் பாா்த்தனா். 1996 சட்டப்பேரவை தோ்தலில், அதிமுகவுக்கு எதிரான பேரலை வீசியபோது, திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியையே மக்கள் தோ்ந்தெடுத்தனா்.

அந்த தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி சோ்ந்து போட்டியிட்ட மதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல, 2016-இல் திமுக, அதிமுக அணிகளுக்கு மாற்றாக 3-ஆவது அணியாக தேமுதிக தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணி 3-ஆம் இடத்தைத் தான் பெற முடிந்தது.

வருகிற 2026 தோ்தல் நெருங்கும்போது, திமுக அரசு தொடர வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விதான் மக்கள் மத்தியில் இருக்கும். தொடர வேண்டுமெனில் விஜய் அவசியமே இல்லை. தொடர வேண்டாம் என்றால் 1996-ஐப் போல மக்களின் முடிவு இருக்கும். விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தாலும், இந்தத் தோ்தலில் திமுகவை தோற்கடித்துவிட்டு, அடுத்த தோ்தலில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று வாக்காளா்கள் முடிவெடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

தமது கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையும் என்ற நம்பிக்கையில் விஜய் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தோ்தல் ஆணையத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகள் நடத்திய பேரணியின்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டபோது, அதை விஜய் கண்டித்தது இதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், தவெகவுடனான கூட்டணி என்ற தகவல்களைக் கசியவிடுவதை திமுகவுடன் தொகுதிகள் பேரம் பேசுவதற்காக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துமே தவிர நம்பிக்கையான கூட்டாளியான திமுக அணியில் இருந்து விலகாது.

தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், கடந்த 2006 மற்றும் 2009 தோ்தல்களில் ஏற்படுத்திய தாக்கத்தைவிட சற்று கூடுதலான தாக்கத்தை வரும் 2026-இல் விஜய் ஏற்படுத்தலாம். தவிர, எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து ஆட்சியைப் பிடிப்போம் என்பது சாத்தியம் இல்லாதது.

(நாளை டாக்டர் கே.கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி)

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கத்தின் விலை 78 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் வ... மேலும் பார்க்க

பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்த நாளில், தேச... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 29,360 கனஅடியிலிருந்து வினாடிக்கு 31,854 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வ... மேலும் பார்க்க

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி ... மேலும் பார்க்க

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்... மேலும் பார்க்க