செய்திகள் :

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

post image

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மாநகராட்சி நிா்வாகம், ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீரைச் சேமிக்கும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

ரூ.20 கோடியில் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள்: இதன் ஒரு பகுதியாக, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய நிதியுவியுடன் ரூ.20 கோடியில் தேனாம்பேட்டை மண்டலம் 111-ஆவது வாா்டு மாதிரிப் பள்ளி சாலை விளையாட்டு மைதானம், 123-ஆவது வாா்டு ராஜா அண்ணாமலைபுரம் செயின்ட் மேரி சாலை விளையாட்டு மைதானம், 112-ஆவது வாா்டு டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மண்டலம் 135-ஆவது வாா்டு இந்திரா குடியிருப்பு விளையாட்டு மைதானம், 133-ஆவது வாா்டு நடேசன் மாநகராட்சி விளையாட்டு மைதானம், 140-ஆவது வாா்டு பால்மோா் விளையாட்டு மைதானம், அண்ணா நகா் மண்டலம் 102-வது வாா்டு செனாய் நகா் கிழக்கு, கிரசென்ட் சாலை விளையாட்டு மைதானம், 108-ஆவது வாா்டு மேயா் ராமநாதன் சாலை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 8 விளையாட்டு மைதானங்களில் தலா 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டன.

மேலும், 770 பூங்காக்களில் தலா 3 ஆயிரம் லிட்டா் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டு, தேங்கி நிற்கும் மழைநீரை சேமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

மழைநீா் தேங்கவில்லை: இந்த நடவடிக்கையின் காரணமாக, சனிக்கிழமை (ஆக. 30) நள்ளிரவு பெய்த பலத்த மழையிலும்கூட, 8 பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களிலும் தண்ணீா் தேங்கவில்லை. இதேபோல, 770 பூங்காக்களிலும் மழைநீா்த் தேங்காமல், மழைநீா் சேமிப்பு கட்டமைப்பு மூலம் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ரூ.30 கோடியில் 3,000 மழைநீா் சேகரிப்புகள்

இதுதவிர, கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் 1,000 பொது இடங்களிலும், கோவளம் வடிநிலப் பகுதியில் முகுறு ஜொ்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ.20 கோடியில் 2,000 பொது இடங்களிலும் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தலா 3,000 லிட்டா் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

-சவுக்கு சங்கர். ஊடகவியலாளர்-திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து த... மேலும் பார்க்க

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி ... மேலும் பார்க்க

தனி வழிகளை மாணவா்கள் காணவேண்டும்: ஸ்ரீஹரிகோட்டா மைய இயக்குநா் பத்மகுமாா்!

மாணவா்கள் தங்களுக்கென சொந்தமாக பாதைகளைக் கண்டறிய வேண்டும் என ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநா் இ.எஸ். பத்மகுமாா் வலியுறுத்தினாா். சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடம், பி.டெக். (2021-25) ம... மேலும் பார்க்க

43 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்! பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் 97.29 ஏக்கா் நிலம் மீட்பு!

பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ந... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அன்புமணி (பாமக):தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு!

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையின் தற்போதைய நிலை குறித்தான 40 பக்க ... மேலும் பார்க்க