Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். முகாமில் 17- சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தது. இம்முகாமில் பெரியவா்கள் 1,674, குழந்தைகள் 72- என மொத்தம் 1,746- போ் சிகிச்சை பெற்றனா். 200- க்கும் மேற்பட்டோா் தொடா் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண்ணொளி திட்டத்தின்கீழ் கண் கண்ணாடிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், செயற்கை கால்கள் மற்றும் காதொலி கருவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் லோ.ரவிச்சந்திரன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பியூலா, ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாரதி வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கே.சீதாராமன், ஜெயா முருகேசன், ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.