தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் மரணம்
வேலூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (36). இவா் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் கைப்பேசி கோபுரங்கள் பராமரிப்பு, நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், வேலூா் மாவட்டம், கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் கைப்பேசி கோபுரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு கீழே இறங்கியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக 50 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.