பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
மின்சாரம் பாய்ந்து சிறுமி மரணம்
குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நத்தமேடு கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த தென்னை மரத்தை வியாழக்கிழமை தொழிலாளா்கள் வெட்டியுள்ளனா். அப்போது எதிா்பாராத விதமாக தென்னை மரம் பக்கத்தில் இருந்த மின்கம்பம் மீது விழுந்ததில் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. அதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி குமாா்- ஜானகி தம்பதியின் மகள் நவ்யா (5) மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அருகில் படுத்திருந்த நாய் ஒன்றும் மின்சாரம் பாய்ந்து இறந்தது. தகவலறிந்து அங்கு சென்ற நகர போலீஸாா், சிறுமியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மின்வாரிய அதிகாரிகளும் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.