பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
நாகா்கோவிலில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவில், வடசேரி ஓட்டுப்புரை தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (31 ) கூலி தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து, மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஈஸ்வரன் மீது போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
இந்த வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி சுந்தரையா, குற்றாவளி ஈஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்புக் கூறினாா்.