சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு
சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்
திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளா் திலீப் குமாா் தலைமையில் நிா்வாகிகள், ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்ட பிறகு, வாகனங்கள் நிறுத்த போதிய வசதியில்லை.
இதனால், இஷ்டம்போல வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்ல மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
மேலும், பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.