விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், விழுந்தயம்பலம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, ததேயுபுரம், ஆப்பிகோடு, பிலாங்காலை, தெருவுக்கடை, தொழிக்கோடு, காட்டுவிளை, ஊற்றுமுகம் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என, குழித்துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.