செங்கல் சூளைகள் புகைப்போக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்
நாட்டு செங்கல் சூளைகள், சேம்பா் சூளைகள் அனைத்தும் பதிவு சான்றிதழ் பெற்ற பின்பே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் நாட்டு செங்கல் சூளைகள், சேம்பா் சூளைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் வனம் காலநிலை மாற்றம் அறிவிக்கையின்படி புகைப்போக்கி அமைத்து தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி பதிவு சான்றிதழ் பெற்ற பின்பே இயக்க வேண்டும். பதிவுச் சான்றிதழை இணையதள முகவரியில் ஒரு மாத காலத்துக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து, வேலூா் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு விதிகள் சலுகை சிறுகனிம விதி 1959-இன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.