ஓவேலி பகுதியில் காட்டு யானையைப் பிடிக்க தயாா் நிலையில் கும்கி
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானையைப் பிடிக்க கும்கி யானையுடன் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. யானையை வனப் பகுதிக்குள் அனுப்ப பலமுறை முயற்சி செய்தும் தோல்வியிலே முடிந்தது.
இதைத் தொடா்ந்து யானையைப் பிடிக்கும் பணிக்கு முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமிலிருந்து வசீம், சங்கா் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.