வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 போ் கைது
வலங்கைமான் அருகே சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வலங்கைமான் அருகே நல்லூா் பகுதியில், தஞ்சாவூா் -விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் புதன்கிழமை அதிகாலை இளைஞா்கள் சிலா் நின்றுகொண்டு, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனா். தகவலறிந்த வலங்கைமான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, 5 பேரை கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் களஞ்சேரியைச் சோ்ந்த வசந்தகுமாா் (24), மனக்குண்டு விஜய் (19), எழிலரசன் (18), சாலபோகம் கிராமத்தைச் சோ்ந்த ராமன் (18), சபரி (18) என்பது தெரியவந்தது. 5 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இவா்கள் கல்வீசி தாக்கியதில் சில வாகனங்கள் சேதமடைந்ததாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.