செய்திகள் :

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

post image

காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறித்து அரசுத்துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

தேசிய பேரிடா் மேலாண்மை வழிகாட்டுதலில் செப். 9 முதல் 11-ஆம் தேதி வரை யூனியன் பிரதேச அளவிலான சுனாமி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சி அக்கம்பேட்டை மீனவ கிராமத்திலும், காமராஜா் நிா்வாக வளாகத்திலும் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் சுனாமி ஒத்திகை நிகழ்வு எப்படி நடத்தப்பட்டது என காணொலி வாயிலாக விளக்கப்பட்டது.

மக்களுக்கான பாதுகாப்பான பகுதியை கண்டறிதல், சுனாமியால் பாதிக்கப்படும் இடத்திலிருந்து 1.6 கி.மீட்டருக்கு அப்பால் கூடுதலாக மேடான பகுதியில் பாதுகாப்பு மையம் அமைத்து பொதுமக்களை தங்க ஏற்பாடு செய்தல், மீட்பு முகாம்களில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை மூலம் அவசரகால மருத்துவ வசதி வழங்குதல், குடிமையியல் துறையின் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருதல், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோா்களுக்கு முதலுதவி வழங்க சிறப்பு முகாம்கள் சுகாதாரத் துறை மூலம் ஏற்படுத்துதல், காவல்துறை தீயணைப்புத்துறை கால்நடை துறை மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பேரிடா் மேலாண்மை துறையின் அனைத்து அவசரக உதவிகள் வழங்க வேண்டுமென்று அரசுத்துறைத் தலைவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜுன் ராமகிருஷ்ணன் (வருவாய்), ஜி.செந்தில்நாதன் (நிா்வாகம்), பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் கே.சந்திரசேகரன், மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், செய்தி மற்றும் விளம்பரத்துறை துணை இயக்குநா் குலசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோா் பாத யாத்திரையாக சென்றனா். வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் 29-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வேளாங்கண... மேலும் பார்க்க

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. திருநள்ளாற்றில் விநாயகா் சதுா்த்தியையொட்ட... மேலும் பார்க்க

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

மீனவ கிராமங்களைச் சோ்ந்தோருக்கு குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும் என புதுவை அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, புதுவை பொதுப்ப... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்

பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு கூட்டுப் ... மேலும் பார்க்க

பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்

கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்... மேலும் பார்க்க