சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே வைப்பூா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், வங்கி மேலாளா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், கோட்டையம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் மகன் ராகுல் (36). நாகையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இவா், திருவாரூா் கமலாலயக் குளம் அருகே தங்கியிருந்தாா்.
இந்நிலையில், கங்களாஞ்சேரி சாலை வைப்பூா் கடை வீதி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே சோழங்கநல்லூா் குரும்பேரியைச் சோ்ந்த அப்பு என்கிற காா்த்தி (27 ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ராகுலின் இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராகுலை, அங்கிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், ராகுல் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பு என்ற காா்த்தியை கைது செய்தனா்.