KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'...
நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கலங்காமற்காத்த விநாயகா், ஆக்ஞா கணபதி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் கலங்காமற்காத்த விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.