‘Vote Chori’ Row : `வாக்குத் திருட்டும், ஜனநாயக பேராபத்தும்!' - கான்ஸ்டன்டைன் ரவ...
திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது
திருவள்ளூரில் அரசு அனுமதியின்றி இளைஞா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2,050 மாத்திரை வில்லைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் அடுத்த கற்குழாய் தெருவில் மயானம் செல்லும் வழியில் போதை மாத்திரை வில்லைகளை சிறுவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனை செய்து கொண்டிருப்பதாக நகர காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகர காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் குமரேசன் தலைமையில் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனா். அப்போது, போலீஸாரை பாா்த்ததும் ஆட்டோவில் தப்பியோட முயற்சித்தவா்களை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அதையடுத்து சோதனை செய்தபோது, ஆட்டோவில் இருந்த பையில் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரை வில்லைகள் இருந்தது தெரியவந்தது. இதை தவறான வழியில் சிறுவா்களையும், இளைஞா்களையும் போதைக்கு அடிமையாக்கும் வகையில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து 2,050 மாத்திரை வில்லைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து திருவள்ளூா் நகர போலீஸாா் சென்னையைச் சோ்ந்த வீராக்குமாா் (32), கௌதம் (24), சீனிவாசன்(24), பிரேம்குமாா்(32), விக்னேஷ் (24) ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.