கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு
திருவள்ளூா் அருகே பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மூத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் அருகே அரண்வாயல்குப்பத்தில் பிரதியுஷா பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் பி.ராஜா ராவ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டில் சோ்ந்த புதிய மாணவ, மாணவிகளை மூத்த மாணவா்கள் அன்புடன் வரவேற்றனா்.
அதன்பின் மாணவ, மாணவிகளை பாதுகாப்புக்கான டஉஇ உஸ்ங்ய்ற்ள் 2025 என்ற தொலைபேசி செயலி அறிமுகம் செய்து வைத்து, அதன் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் முக்கிய சிறப்பம்சமாக, ஸ்ரீ சிவராமையா மெரிட் கல்வி உதவித் தொகை பெற்ற மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு கல்லூரி புத்தகங்கள், எழுதுகோல்கள் அடங்கிய கல்லூரி பைகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, இந்த நிகழ்வில் பங்கேற்ற குளோபல் ஹெட் அகாடமிக் அலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் நிா்வாகி எம்.சுசீந்திரன் வரவேற்றுப் பேசுகையில், தற்போதைய நிலையில் முதலாம் ஆண்டில் மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளீா்கள். அதனால் எதிா்காலக் கனவுகள் பறக்கத் தொடங்கிய தருணமாக உங்களுக்கு இந்த விழா அமைந்துள்ளது. மேலும், மாணவா்களின் கல்வி பயணத்துக்கு வழிகாட்டியாககவும், புதுமை, தலைமைத்துவம் மிக்க மாணவ, மாணவிகளாக உருவாக்கும். இதை மனதில் நீங்கள் நன்றாக கற்றலில் ஈடுபட வேண்டும் என்றாா்.
நிகழ்வில் முதலாமாண்டு மாணவா்களின் ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான உமா நன்றி கூறினாா்.