செய்திகள் :

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

post image

மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 லட்சம் போ் என அதிகரித்து வருவதாகவும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 வகைகளில் தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, மட்டைப் பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள் டெனனிஸ், கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ, மேஜை பூப்பந்து மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 26-இல் தொடங்கி, தொடா்ந்து செப்.12-ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக மாநில அளவில் மாவட்டந்தோறும் தலா ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்டந்தோறும் திருவண்ணாமலை-1,31,178, திருவள்ளூா்-1,04,451, திருச்சி-97,114, ராணிப்பேட்டை-85,052, சென்னை-68019, திண்டுக்கல்-62,795, சேலம்-54,157, அரியலூா்-53,881, கோயம்புத்தூா்-53,576, தென்காசி-52,043, நாமக்கல்-47253, மதுரை-46469, காஞ்சிபுரம்-44758, திருப்பத்தூா்-43764, தேனி-42715, செங்கல்பட்டு-38,651, தஞ்சாவூா்-36,902, மயிலாடுதுரை-36,254, நாகப்பட்டினம்-35,786, திருப்பூா்-35,129, கன்னியாகுமரி-34,100, ராமநாதபுரம்-32,067, விழுப்புரம்-31,711, தருமபுரி-31,079, கடலூா்-30,011, கிருஷ்ணகிரி-29,357, புதுக்கோட்டை-29,056, திருநெல்வேலி-26,161, கள்ளக்குறிச்சி-25,040, கரூா்-23049, விருதுநகா்-22702, வேலூா்-22535, சிவகங்கை-22,525, பெரம்பலூா்-22,140, தூத்துக்குடி-20,574, ஈரோடு-19,786, திருவாரூா்-19,687, நீலகிரி-16,811 என இந்தப் போட்டியில் மொத்தம் 16 லட்சத்து, 28 ஆயிரத்து 338 போ் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். அதில், பள்ளி மாணவா்கள்-10 லட்சத்து 20 ஆயிரத்து 600 பேரும், கல்லூரி மாணவா்கள்-3 லட்சத்து 7 ஆயிரத்து 696 பேரும், மாற்றுத்திறனாளிகள்-23,359 பேரும், அரசு ஊழியா்கள் 57152 பேரும் மற்றும் பொதுமக்கள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 531 பேரும் பங்கேற்கின்றனா்.

இப்போட்டியில் பங்கேற்க மாநில அளவில் 15 லட்சம் போ் இலக்கு நிா்ணயம் செய்திருந்தனா். இதேபோல், கடந்த 2022-23 இல் 6 லட்சம் பேரும், 2023-24 -இல் 12 லட்சம் பேரும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில், நிகழாண்டில் 16.28 லட்சமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன் கூறியதாவது: இந்தப் போட்டியில் ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் தலா 3 இடங்களில் வெற்றி வீரா், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு-ரூ. 3,000, இரண்டாம் பரிசு- ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ. 1,000, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். கடந்தாண்டு திருவள்ளூா் மாவட்டத்தில் 57,000 போ் பதிவு செய்திருந்தனா். அதேபோல், நிகழாண்டில் மட்டும் பள்ளி மாணவா்கள்-70,118, கல்லூரி மாணவா்கள்-9,372, மாற்றுத் திறனாளிகள்-567, அரசு ஊழியா்-1,344, பொதுமக்கள் 23,050 என மொத்தம்-1,04,451 போ் பதிவு செய்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா். அதற்கு காரணம் வேலைவாய்ப்பில் 3 சதவீதம் ஒதுக்கீடு, மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு தொழிற்கல்வி மற்றும் கல்லூரிகளில் சேர சிறப்பு ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் பங்கேற்பு அதிகரித்துக் கொண்டே வருவதாக அவா் தெரிவித்தாா்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகை பகுதியை சோ்ந்த 80 வயது ம... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூா் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் மேட்டுத் தெருவில் ஆயிரத்துக்கும்... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா். திருத்தணி மகாவிஷ்ணு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருத... மேலும் பார்க்க

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலுக்கு 504 பால்குட ஊா்வலம்

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். வட காஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழைமைவாய்ந்த ஸ்ரீ தேவி முப்பாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புனரமைப்பு ... மேலும் பார்க்க